திண்டுக்கல்: ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பேராசிரியர் உட்பட 2 பேர் மீது, திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் அருகே என்.பஞ்சம்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ரோசாயி இருதய மேரி, 68. காஞ்சிபுரம், தாலூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆசிரியரான நாராயணசாமி, 47, திண்டுக்கல், சின்னாளப்பட்டியை சேர்ந்த அண்ணா பல்கலை இயற்பியல் துறை தலைவர் ஜோசப் பிரின்ஸ், 50, ஆகியோருடன் இருதய மேரிக்கு அறிமுகம் ஏற்பட்டது. குடும்ப நண்பர்களாக பழகிய இவர்கள், தி.மு.க., ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவின் உதவியாளர் கோபாலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக கூறியுள்ளனர். மேலும், இவர்களது உறவினர் ஹரிஹரன் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிவதாகவும் கூறியுள்ளனர். இவர்களிடம் இருதய மேரி, தனது மகள்கள் கேத்ரீன் அன்பரசி, செரின் ராஜகுமாரி மற்றும் உறவினர்கள் அமலி லூமியன் ஜூலியட், ஆஞ்சலா மெர்சி ராணி, மேரி சாலி ஜெனித், சுதா, சிங்கராஜ் ஆகியோருக்கு வேலை வாங்கி தருமாறு கூறி, முதற்கட்டமாக ரூபாய் 15.50 லட்சத்தையும், 2 வது கட்டமாக ரூபாய் 11.50 லட்சத்தையும், கடந்த 2009 ல் கொடுத்துள்ளார். ஆசிரியர் வேலை வாங்கித் தராததால், ரூபாய் 11.50 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்தவர்கள், மீத பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனர். மோசடி செய்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு இருதய மேரி, கடந்த டிச., 2 ல்,திண்டுக்கல் எஸ்.பி. ஜெயசந்திரனிடம் புகார் செய்தார். மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ. அங்குசாமி இருவரையும் தேடி வந்தார். சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் பெற்ற இருவரும், நேற்று திண்டுக்கல் ஜே.எம்.கோர்ட் 2 ல் ஆஜராகினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.