வேலை வாய்ப்பகங்களில், 30 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட, 400க்கும் மேற்பட்ட இடங்கள், காலியாக உள்ளதால், பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், ஆண்டு தோறும், 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளிப் படிப்பையும், பல லட்சம் மாணவர்கள், கல்லூரி படிப்பையும் முடிக்கின்றனர். இவர்கள் அனைவரும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலைக்காக பதிவு செய்கின்றனர்.தற்போதைய அரசு அறிவிப்பின் படி, 70 லட்சத்திற்கும் அதிகமானவர்கள், பதிவு செய்துள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களை பொறுத்தவரை, தினசரி ஆயிரக்கணக்கானவர்கள், பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்டவற்றிற்காக படையெடுக்கின்றனர்.சமீபத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்து, சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள்
நடந்த போது, இடைநிலை ஆசிரியர்கள், பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்படுவர் என்பதால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு தகவல்களை சரிபார்க்க, கூட்டம்
அலை மோதியது.இதில், பல மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில், மாவட்ட
வேலைவாயப்பு அலுவலர் இல்லாததால், பதிவுதாரர்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டனர். இதையடுத்தே, சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களிலேயே,
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பெரும்பாலான பணியிடங்கள்காலியாக இருப்பதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்; 245 உதவியாளர்கள்; 25 இளநிலை உதவியாளர்கள்; 25 தட்டச்சர் பணியிடங்கள் உள்ளிட்ட, 400க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது தெரிய
Advertisement
வந்துள்ளது.
இந்த காலியிடங்களை நிரப்ப கோரி, தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை ஊழியர் சங்கத்தினர், அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் இயக்ககம் முன்பாக, இன்று காலை ஆர்பாட்டம் நடத்துகின்றனர்.காலிப்பணியிடங்களை
நிரப்ப வேண்டும்; கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, பணி
வரண்முறை செய்ய வேண்டும். அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங்களில்,
பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பை பயன்படுத்த வேண்டும்.
திவு மாற்றம் செய்ய, இடப்பெயர்ச்சி சான்று, இருப்பிடச் சான்று, கோரும் விதிமுறையை ரத்து செய்து, ரேஷன் கார்டு அடிப்படையில் பதிவு மாற்றம் செய்ய வேண்டும். வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகையை, இரட்டிப்பாக்கி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர்.ஆண்டுதோறும் பல லட்சம் பேர், வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து வரும் நிலையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரே இல்லாமல் அலுவலகங்கள் இயங்கி வருவது, பதிவு செய்தோரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. - நமது நிருபர்-