சென்னை: பலரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட சஹானா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். கேரளாவைச் சேர்ந்தவர் சஹானா. சென்னை உள்ளிட்ட பல இடங்களில், பலரை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி, மோசடியிலும் ஈடுபட்டதாக, கடந்த சில மாதங்களுக்கு முன், கைது செய்யப்பட்டார். இதையொட்டி, ஜாமினில் வெளி வந்தவர், நேற்று மாலை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
புளியந்தோப்பைச் சேர்ந்த பிரசன்னாவின் குழந்தை, என் வயிற்றில் வளர்கிறது. நான் ஒன்பது மாதம் கர்ப்பமாக உள்ளேன். தற்போது, பிரசன்னாவின் பெற்றோர், அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். போலீசார் என்னை பிரசன்னாவுடன் சேர்த்து வைக்க வேண்டும். என் உயிருக்கு அவர்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனக்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டால், அதற்கு பிரசன்னாவின் பெற்றோரே பொறுப்பு. இவ்வாறு புகார் மனுவில் சஹானா தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.