ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தில் நடக்கும் அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களை, போக்குவரத்திற்கு தடை ஏற்படாத வகையில் நடத்த வேண்டும்.
ஒட்டன்சத்திரத்தில் எந்த அரசியல் கட்சி பொது கூட்டம் என்றாலும், தாராபுரம் ரோட்டில், கார்த்திக் தியேட்டர் எதிரில் உள்ள இடத்தில் நடத்தப்
படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிக போக்குவரத்து நிறைந்த, இந்த இடத்தை சுற்றி பல வர்த்தக நிறுவனங்கள், கிளினிக்கள், குடியிருப்புகள் உள்ளன. ஒரு மின்கம்பம் விடாமல் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் கட்டப்பட்டு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
கூட்டம் தொடங்குவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே ரோட்டை மறித்து சேர்கள் போடப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. பஸ்போக்குவரத்து நாகனம்பட்டி பைபாஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படுகிறது. அதேபோல் மதுரை பகுதியில் இருந்து தாராபுரம் ரோட்டிற்கு செல்ல வேண்டிய வாகனங்களும் நாகனம்பட்டி ரோட்டில்தான் திருப்பி விடப்படுகிறது. தாராபுரம் பகுதியில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு வரவேண்டியவர்கள் பஸ்ஸ்டாண்ட்டில் இருந்து பல கி.மீ.தூரத்திற்கு முன்பே இறக்கிவிடப்படுகின்றனர். அவர்கள் ஒட்டன்சத்திரம் வர ஆட்டோ பிடித்து வரவேண்டி உள்ளதால் அதிக செலவு ஏற்படுகிறது. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளால் ஏற்படும் இரைச்சல் காரணமாக மாணவ மாணவிகள் படிப்பில் முழுக்கவனம் செலுத்த முடியவதில்லை. இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்தான்.
ரோட்டை மறித்து சேர்கள் போடுவதை அனுமதிக்கவும், அப்பகுதியில் போக்குவரத்தை போலீசார் தடை செய்யக்கூடாது.