கொடைக்கானல்:கார்களுக்கு டீசல், டயர் மாற்றியது உட்பட செலவினங்கள் மட்டுமே அஜன்டாவில் வாசிக்கப்படுகிறது. மக்களுக்கு அடிப்படை பிரச்னைகள் கவனிக்கப்படவில்லை என அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொடைக்கானல் ஒன்றியக் கூட்டம் தலைவர் ராதாகிருஷ்ணன்(அ.தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை தலைவர் பொன்னுதுரை, பி.டி.ஓ., பழனியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
நூர்முகமது(அ.தி.மு.க.,): ஒன்றிய அலுவலகத்தில் கார்களுக்கு டீசல், டயர் மாற்றியதுதான் அஜன்டாவில் வாசிக்கப்படுகிறது. மக்களுக்கு அடிப்படை பணிகள் செய்வதை வாசிப்பதில்லை. வட
கவுஞ்சியில் யார் உண்மையான தலைவர், எழுத்தர் என்பதை தெளிவு படுத்த வேண்டும். தொகுப்பு வீடுகளில் பயனாளிகளுக்கு தெரியாமல் முறைகேடு
செய்யப்படுகிறது. நான் ஆளும்கட்சியா, எதிர்கட்சியா என்று கூட தெரியவில்லை. பைப் லைன் அடைக்கப்பட்டதால்,
மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.
சுமதி: குக்காலில் காஞ்சி நகர் பகுதியில் தண்ணீர் இல்லை.
முருகேசன்(தி.மு.க.,): ஒன்றிய அலுவலகத்திற்கு செலவு மட்டும் வாசிக்கிறார்கள். வருமானம் வாசிப்பதில்லை.
பி.டி.ஓ., பழனியப்பன்: தாண்டிக்குடி நறுமன சுற்றுலா ஸ்தலத்தில் இருந்து ரூ.70 ஆயிரம் வருமானம் வருகிறது. ரூ.ஒருகோடியில் பயிற்சி மையம் கட்டுவதற்கு 2 ஏக்கர் நிலம் நாயுடுபுரம் அருகே பார்க்கப்பட்டுள்ளது.
தவசி(அ.தி.மு.க.,): டெண்டர் அறிவிப்பு கவுன்சிலர்களுக்கு தெரியாமல் அறிவிக்கப்படுகிறது.
பாக்கியராஜ்(அ.தி.மு.க.,): குறிஞ்சி நகர் பகுதியில் ரோடு அமைப்பதற்கு பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாமல் உள்ளது. தலைவரிடம் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாமல் உள்ளது. துணை தலைவரும், தலைவரும் கூட்டாக செயல்
படுகின்றனர்.
துணை தலைவர் பொன்னுதுரை: பிற்படுத்தப்பட்ட மானிய நிதியின் மூலம் பல பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றை வாசிக்க கூறியுள்ளேன். ஊரக விளையாட்டு போட்டிகள் நடத்தப்
படுகின்றன. இவற்றிற்கு கவுன்சிலர்களை அழைப்பதில்லை.
தலைவர்: புகார்களை எழுத்துப்பூர்வமாக தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.