மதுரை:மதுரை தமுக்கம் மைதானத்தில், நடக்கும் எஸ்.வி.என்., முன்பனிச் சாரல், வீட்டு உபயோகப் பொருட்காட்சி மற்றும் கல்வி கண்காட்சியில், ராணுவத்தின் நவீன ஏவுகணையான "பிரமோத்ஸ்', இன்று(டிச.,27) முதல் இடம் பெறுகிறது.
கண்காட்சி இயக்குனர் வஞ்சிக்கோ கூறியதாவது:
இக்கண்காட்சியில் பல புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள. இங்குள்ள "இஸ்ரோ' கண்காட்சி கூடத்தில், ராக்கெட்டுகளின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்படுகின்றன. "பிரமோத்ஸ்' ஏவுகணை குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர். ஜன., 2ல் கண்காட்சி நிறைவு பெற்றாலும், ஜன., 3ல் மாணவர்களுக்காக கண்காட்சி நடக்கும், என்றார்.
நுழைவு கட்டணம் ரூ.30, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10, 12 வயதுக்குட்பட்டவர் களுக்கு அனுமதி இலவசம். கண்காட்சி நேரம் மாலை 4 - இரவு 9 மணி, சனி, ஞாயிறு, காலை 11 மணி முதல் நடக்கும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.