புதுடில்லி: நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுத்திட போலீசார் தகுந்த பாதுகாப்பு வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் இளம் பெண்களுக்கு பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது குறித்து சில அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன் டில்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை கண்டித்து டில்லியில் முக்கிய பகுதிகளில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு போலீசார் அறிவுரை வழங்க வேண்டும்
இந்நிலையில் ஐ.பி.எஸ். அந்தஸ்து பெற்ற அதிகாரிகள் குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அவர்களிடம் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது: போலீஸ் என்றால் பொதுமக்களிடையே தவறான கண்ணோட்டம் ஏற்படக்கூடாது. இதனை தவிர்க்க வேண்டும். போலீசாரின் பணி சட்டம் ,ஒழுங்கை பாதுகாப்பது தான். இதில் அவர்களுக்கு தலையாய பொறுப்பு உள்ளது. அதே நேரத்தில் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படக்கூடாது. மனித உரிமை பாதுகாக்க வேண்டும்.நாட்டில் உள்ள பல்வேறு சமூக குற்றங்களை தடுப்பதில் போலீசாரின் பங்கு முக்கியமானது. பாலியல் பலாத்கார சம்பவங்கள் உள்ளிட்ட சமூக குற்றங்கள் நடப்பது ஏன் என்பன குறித்து மனதத்துவ ரீதியில் கண்டறிய வேண்டும். இது போன்ற கொடூர செயல்கள் கொண்ட மனப்போக்கினை ஒழித்து கட்ட வேண்டியது அவசியம்.நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுத்திட போலீசார் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் பொது இடத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டியது குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியும், எது நல்லது? , எது கெட்டது? என்பதனை போலீசார் எடுத்து கூற வேண்டும். இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு போலீசார் நல்ல ஆலோசகராக , நண்பனாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எதாவது ஒருவழியில் போலீஸ் காரர்களுக்கு லஞ்சம் கொடுத்திருப்பார்கள் அவரவர் வாழ்நாளில் என்பது என்னுடைய ஆசியா நம்பிக்கை... இப்படி இருந்தால் அவர்கள் மீது எப்படி நம்பிக்கை வரும். அறிவுரைக்கு 500 கொடு என்று சொல்லும் போலீஸ் இடம் எவன் போயி குறைய சொல்வான்... பாதுகாப்பு கொடுக்குரன்களோ இல்லையோ மக்களை நல்ல அலையை விடுவாங்க ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்...
போலீசார், எதற்காக தங்கள் பணி உள்ளது என்ற உணர்வு, உண்மையில் அவர்களுக்கு உள்ளதா ...போலீஸ் என்றாலே அவர்கள் மீது ஏன் வெறுப்பு உணர்வு ..அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தானே என்ற சிந்தனை மக்கள் மனதில் ஏன் தோன்றுவதில்லை ...இதெற்கெல்லாம் அவர்களை பற்றிய தவறான சிந்தனை தோன்ற அடிப்படை காரணம் என்ன ..இதை நீக்குவது எப்படி என்பதற்கு கூடவே ஒரு பயிற்சியை காவலருக்கு கொடுக்கலாம் ...மக்களிடம் போலீஸ் பற்றிய எண்ண கணக்கெடுப்பு நடத்தலாம் ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.