மேலூர்:மேலூரில், அரசின் பல்வேறு அலுவலகங்கள் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில், கழிப்பறை வசதி இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
இங்கு குற்றவியல் கோர்ட், தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், கிளை கருவூலம், வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், தீயணைப்பு நிலையம், கிளை சிறை உள்ளன.
தினமும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகின்றனர். அடிப்படை தேவையான கழிப்பிடம், குடிநீர் வசதி இல்லை. இதனால், ஆண்கள் தங்கள் "அவசரத்திற்கு' சுற்றுச்சுவர் ஓரத்தை பயன்படுத்துகின்றனர். பெண்களின் நிலைதான் பரிதாபம். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
குடிநீர் வேண்டுமானால், கடைக்கு சென்று, பொருட்கள் வாங்கினால் தான் தண்ணீர் தருகின்றனர். தாலுகா வளாகத்தில் காலியிடம் அதிகம் உள்ளது. கலையரங்கள், சிமென்ட் களங்கள் அமைப்பதை விட, அத்தியாவசிய தேவையான குடிநீர், கழிப்பிடத்தை அமைக்க, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.