மதுரை:மதுரை மகால் ரோடு- காமராஜர் ரோடு சந்திப்பில், விதி மீறிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் இருப்பதோடு, நெரிசலும் ஏற்படுகிறது.
வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில், காமராஜர் ரோடு முக்கியமானது. மகால் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் ரோடு, விளக்குத்தூண் மற்றும் கீழமாரட் வீதிக்கு செல்கின்றன. இதனால் மகால் ரோடு-காமராஜர் ரோடு சந்திப்பு காலை, மாலையில் படுபிஸியாக இருக்கும். இங்கு போலீசார் உள்ளனர்.
இருப்பினும், கீழவாசல் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், "சிக்னலுக்கு' காத்திருக்க பொறுமையின்றி, விளக்குத்தூண் அல்லது கீழமாரட் வீதிக்கு செல்கின்றன. போலீசார் தடுத்தாலும், நிற்பதில்லை. அதே நேரத்தில், மகால் ரோட்டிலிருந்தும் வாகனங்கள், மூன்று திசைகளிலும் செல்வதால், விபத்து அபாயம் உள்ளதுடன், நெரிசலும்
ஏற்படுகிறது.
தவிர, ரோட்டோர மற்றும் பிளாட்பார கடைகளின் ஆக்கிரமிப்புகளாலும் நெரிசல், விபத்து ஏற்படுகிறது.
மகால் ரோடு பஸ் ஸ்டாப், ரோடு சந்திப்புக்கு அருகில் இருப்பதால், பயணிகள் சந்திப்பு வரை நிற்கின்றனர். அவர்களுக்காக பஸ் நிற்கும்போது, பின்னால் வரும் வாகனங்கள் முன்னேறிச் செல்வதில் சிரமம் நிலவுகிறது.
தீர்வு தான் என்ன: விதிமீறி செல்லும் வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்துவதுடன், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மகால் ரோடு
பஸ் ஸ்டாப்பை சற்று தள்ளி
அமைக்கலாம். பஸ்களை சந்திப்பு
அருகே நிறுத்தாமல் இருக்க டிரைவர்களுக்கு போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்த
வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.