தர்மபுரி: தர்மபுரியில் போலீஸ் அனுமதியின்றி புத்தாண்டு நிகழ்சிக்கு ஏற்பாடு செய்த ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் மகன் உள்ளிட்ட இரண்டு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
தர்மபுரி அடுத்த நாயக்கன்கொட்டாய் கலவரத்தை தொடர்ந்து, கடந்த, 14ம் தேதி அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும், 88 கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, கும்பலாக கூடவும் தடையுள்ளது. இந்நிலையில், புத்தாண்டையொட்டி, "லீ கிங்' ஹோட்டல் சார்பாக தர்மபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் டிசம்பர், 31ம் தேதி மாலை, 6 மணி முதல் அதிகாலை வரை பல்வேறு கலைநிழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அறிவிப்புகள் செய்யப் பட்டுள்ளது.
மாவட்டத்தில், 144 தடை உத்தரவு அமுலில் உள்ளதால் ஒரே இடத்தில் அதிகமனோர் கூடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை எனவும், புத்தாண்டு நிகழ்ச்சிகளை ரத்து செய்யும்படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மகன் கார்த்திக்குமார் மற்றும் மதுராபாய் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினர்.உத்தரவு மீறி புத்தாண்டு இரவு நிகழ்ச்சிக்கு டிக்கெட் விற்பனை செய்வதாக தர்மபுரி டவுன் வி.ஏ.ஓ., ராமசுந்தரம் தர்மபுரி டவுன் போலீஸில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சம்பத்குமார், எஸ்.ஐ.,கண்ணன் ஆகியோர் விசாரித்து, கார்த்திக்குமார் மற்றும் மதுரபாய் திருமண்டப உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்."இது போன்று புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த மாவட்டம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் ஒன்று சேர்ந்து கும்பலாக சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்', என எஸ்.பி., ஆஸ்ராகர்க் எச்சரித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.