தர்மபுரி: கல்லூரி மாணவியை கடத்திய காதலனை போலீஸார் கைது செய்தனர்.தர்மபுரி பிடமனேரி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லன் மகள், தர்சனி, 17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தர்மபுரியில் உள்ள, தனியார் கல்லூரியில் பி.இ., முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த, 21ம் தேதி வீட்டில் இருந்து திடீர் என மாயமானர்.
தனது மகளை தர்மபுரி வளையகார நாயுடு தெருவை, சேர்ந்த சங்கர், 26, மாது, சுதா, அருண், சத்யா, பீமன் உள்ளிட்ட, ஒன்பது பேர் கடத்தி சென்றதாக செல்லன் தர்மபுரி டவுன் போலீஸில் புகார் செய்தார்.போலீஸார் இளம் வயது திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அவர்களின் மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்டு எச்சரித்தை தொடர்ந்து கடந்த, இரு தினங்களுக்கு முன் தர்சனியை தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர்.நேற்று முன்தினம் சங்கர் தர்மபுரி, நான்கு ரோடு பகுதியில் நின்றிருப்பதாக டவுன் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவானர்களை ÷பாலீஸார் தேடி வருகின்றனர். மாணவி தர்சனியை நேற்று (டிச.,26) நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தினர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.