தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், அனுமதியில்லாமல் மதுபானம் விற்ற, இரண்டு ஆயிரத்து, 261 பேர்களை போலீஸார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டத்தில், கள்ளசாரயம் ஒழிக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் அனுமதியில்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து.இதை தடுக்க போலீஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தனர். கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மாவட்டம் முழுவதும், அனுமதியில்லாமல் மதுபானம் விற்றதாக, இரண்டு ஆயிரத்து, 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இதில், 264 பெண்கள் உள்ளிட்ட, 2 ஆயிரத்து, 261 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து, 13 ஆயிரத்து, 110 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து மதுபான கடத்தலுக்கு பயன்படுத்திய, ஒரு கார், ஒரு வேன், 19 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட, 17, இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டத்தில், ஒரு லட்சத்து, 84 ஆயிரம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.