பாப்பிரெட்டிப்பட்டி: ஒன்பது மாத ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த பெண் மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட மூவரை போலீஸார் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புதுகொக்காரப்பட்டியை சேர்ந்த விவசாயி சஞ்சீவன். இவரது மகள் உஷா, 24. இவருக்கும் மேட்டூர் அடுத்த பொங்கலூரை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கும் கடந்த, ஐந்தாண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அனிதா, 3, ஒன்பது மாத கைக்குழந்தை அஜய் ஆகியோர் உள்ளனர்.குடும்ப தகராறு காரணமாக கணவனை பிரிந்து, குழந்தைகளுடன் தந்தை வீட்டில் உஷா வாழ்ந்த வந்தார். அப்போது, இவருக்கும் வள்ளியூரை சேர்ந்த அவரது உறவினர் சந்திரபாபு மகன் சண்முகத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது.சண்முகத்தின் நண்பரான கள்ளியூரை சேர்ந்த பிரபு, 27, வை உஷாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். உஷா பிரபுவை காதலித்தார். இருவரும் பல நாட்கள் தனிமையாக இருந்துள்ளனர். இந்த நேரத்தில் பிரபு தங்கள் காதலுக்கு இடையூறாக உள்ள ஒன்பது மாத கை குழந்தையான அஜயை கொன்று விட்டு வந்தால் தான் உன்னை நான் ஏற்றுக்கொள்வேன் என கூறவே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் மதியம் சின்னசாமி என்பவருடைய விவசாய கிணற்றில் குழந்தையை உஷா வீசி சென்றார்.பின் பிரபுவுடன் தனியாக சென்றுவிட்டார். மாலை உஷாவிடம் குடும்பத்தினர் குழந்தை எங்கே என கேட்டுள்ளார். முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், நேற்று இரவு உஷாவின் அண்ணன் வேல்மணி ஏ.பள்ளிப்பட்டி போலீஸார் புகார் செய்தார்.புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குபதிவு செய்து உஷாவை கைது செய்து விசாரணையில், கள்ளக்காதலுடன் சேர்ந்து குழந்தையை கிணற்றில் போட்டு கொலை செய்தது தெரிந்தது. குழந்தை கொலை செய்த தாய் உஷா, கள்ளக்காதலன் பிரபு, இதற்கு உதவியாக இருந்த சண்முகம் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.