district news | பெண் தற்கொலை:| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தற்கொலை:

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: குடும்பத்தகராறில், பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.சூளகிரி அடுத்த குட்டப்பட்டியை சேர்ந்த விவசாயி செல்வம், 35. இவரது மனைவி எல்லம்மாள், 33. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.கடந்த, 20ம் தேதி கணவன், மனைவிக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதால், மனமுடைந்த எல்லம்மாள், 21ம் தேதி திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.குட்டப்பட்டி அடுத்த காட்டுப்பகுதியில் மாடு மேய்க்க சென்ற சிலர் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாகவும், அருகே விஷ பாட்டில் இருப்பதை பார்த்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சூளகிரி போலீஸார் பிணத்தை கைபற்றி விசாரித்தார். விசாரணையில், இறந்தவர் காணாமல் போன எல்லம்மாள் என்பதும் அவர் குடும்ப தகராறில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. எஸ்.ஐ., ரமேஷ்குமார் விசாரிக்கின்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை