பாலக்கோடு: தாய் சாவு குறித்து மகனிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.பாலக்கோட்டை அடுத்த மாரண்டஹள்ளி, பாலசுப்பிரமணி தெருவை சேர்ந்தவர் குண்டப்பன் மனைவி அங்கமுத்து, 58. இவர் தனது இளைய மகன் கிருஷ்ணன் வீட்டில் இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடை மூத்தமகன் செல்வராஜ், 48 மாரண்டஹள்ளி போலீஸில் நேற்று முன்தினம் (டிச.,25) புகார் செய்தார். போலீஸார் கிருஷ்ணனிடம் விசாரித்து வருகின்றனர்.