கிருஷ்ணகிரி: கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு நடந்த எழுத்து தேர்வில், தேர்வான கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நாளை (டிச.,28) முதல் ஜனவரி 3ம் தேதி வரை சென்னையில் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு எழுத்துதேர்வு நடத்தது. தேர்வின் அடிப்படையிலும், அரசு நடைமுறைகளை பின்பற்றி வகுப்பு வாரி ஒதுக்கீடு மற்றும் இனச் சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட்டவர்களின் முடிவுள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாளை முதல் வரும், 3ம் தேதி வரை சென்னை எத்திராஜ் கல்லூரி வளாகத்தில் நேர்முகத் தேர்வு நடக்கிறது. தேர்வு செய்யப்பட்டவர்கள் நேர்முகத்தேர்வின் போது, சரிபார்ப்புக்காக சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்களின் விபரங்கள் இணைய தளத்தில் பதிவு இறக்கம் செய்ய வேண்டும்.மாவட்ட வாரியாக காலி பணியிடங்கள் தொடர்பான விவரங்கள் இணைய தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான மாவட்டம் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் பெயர்களை உரிய படிவத்தில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியை பயிற்று மொழியாக கொண்டு தங்களது இளங்கலை பட்டப் படிப்பினை முடித்திருந்தால், அதற்கு சான்றாக தங்களின் பயிற்று மொழியை குறிப்பிடக்கூடிய ஆவணங்களில் ஒன்றான மாற்றுச் சான்றிதழ் அல்லது பட்டப்படிப்பு படித்த கல்லூரியின் முதல்வரால் தமிழ் பயிற்று மொழியாக கொண்டு பட்டப்படிப்பு படித்தமைக்கான சான்று பெற்று வரவேண்டும்.இந்த சான்றிதழ் இல்லையென்றால் தமிழ் மொழியை பயிற்று மொழியாக கொண்டு தகுதி கல்வி முடித்தமைக்கான முன்னுரிமை வழங்க படமாட்டாது. மேலும், தங்களது வயது, ஜாதி, கல்வித்தகுதிகள் தொடர்பான அனைத்து மூலச் சான்றிதழ்களையும் நேர்காணலுக்கு வரும்போது கொண்டு வரவேண்டும்.இந்த சான்றிதழ்களின் இரண்டு ஜெராக்ஸ் நகல்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று கொண்டு வரவேண்டும். தேர்வு செய்யப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.