திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே ஆள்மாறாட்டத்தில், வெட்டி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.கலசப்பாக்கம் அடுத்த பொய்யானந்தல் வனப்பகுதியில் ஜட்டி, பனியன் அணிந்தபடி, 33 வயது வாலிபர் பிணம் நேற்று முன்தினம் மாலை கிடந்தது. கலசப்பாக்கம் போலீஸார் பிணத்தை கைப்பற்றினர். இறந்தவரின் தலை மற்றும் நெற்றி வலது கால் முட்டி ஆகிய இடங்களில் வெட்டு காயம் இருந்தது, அவரை யாரோ கொலை செய்து சிமென்ட் பையில் கட்டி வனப்பகுதியில் வீசி சென்றிருப்பது தெரிந்தது.
கொலையான வாலிபர் அருகில் இருந்த சட்டையின் காலரில் இருந்த டெய்லர் கடையில் மொபைல்ஃபோனுக்கு போலீஸார் தொடர்பு கொண்டனர். அதை வைத்து அவர் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது.கொலையானவர் ரமேஷ், 33, என்றும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், திருமணமாகி ஆறு மாதமாகிறது. இவரது மனைவி ஆனந்தி, இவர் தற்÷பாது, நான்கு மாத கார்ப்பிணியாக உள்ளார். ரமேஷ் கறிவேப்பிலை வியாபாரம் செய்து வந்தார் என்பது விசாரணையில் தெரிந்தது.
தகவலறிந்த ரமேஷின் தம்பி திருமால், நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்டவர் தனது அண்ணன் தான் என அடையாளம் காட்டினார். மேலும் நடந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட ரமேஷின் தம்பி திருமாலும் கறிவேப்பிலை மொத்த வியாபாரம் செய்து வந்தார்.திருமாலுக்கு தொழில் ரீதியாக பிரச்னை உள்ளது. இதனால், திருமலையை தீர்த்து கட்ட ஒரு கும்பல் முடிவு செய்திருப்பதும், இது குறித்து விழுப்புரம் மாவட்டம், மயிலம் போலீஸில் புகார் செய்த நிலையில், ஆள் மாறாட்டத்தில், ரமேஷ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.