district news | பெங்களூருவில் திருடிய கார்ஜோலார்பேட்டையில் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெங்களூருவில் திருடிய கார்ஜோலார்பேட்டையில் மீட்பு

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: பெங்களூருவில் திருடப்பட்ட கார் ஜோலார்பேட்டையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் கடந்த, 15 நாட்களாக "சில்வர்' கலர் "இனோவா' கார் அனாதையாக நின்றது. பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸார் விசாரித்தனர்.அந்த காருக்கு உரிமை கொண்டாடி யாரும் வரவில்லை. காரின் நம்பரை வைத்து உரிமையாளரை கண்டு பிடிக்க முயன்ற போது, அது மொபட் எண் என்பது தெரிந்தது. காரை திறக்கவும் முடியவில்லை.கார் இன்ஜின் நம்பரை வைத்து விசாரித்த போது, அந்த கார் பெங்களூருவை சேர்ந்தது என தெரிந்தது. விசாரணையில், பெங்களூரு, மோசராஜ் பேட்டை ருத்ரா கார்டனை சேர்ந்த நாகராஜன், 23 என்பவருக்கு சொந்தமான கார் என்றும், இதை வாடகை விட்டு வருவதாகவும், அவரே டிரைவராக இருந்துள்ளார்.கடந்த நவம்பர், 9ம் தேதி இரவு, 2 மணிக்கு பெங்களூரு எம்.ஜி.ஆர்., ரோட்டில் மூன்று பேர் ஒசூருக்குச் செல்ல வேண்டும் என கூறி வாடகை பேசி காரை எடுத்ததாகவும், வழியில் தன்னை அடித்து கீழே தள்ளிவிட்டு காரை திருடி சென்றதாகவும், 10ம் தேதி பெங்களூரு அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்திருப்பதும் தெரிந்தது.காரில் நம்பரை மாற்றி விட்டு, மூன்று பேரும் ஜாலியாக சுற்றி விட்டு கடைசியில் ஜோலார்பேட்டையில் காரை விட்டு சென்றது தெரிந்தது. மேலும் விசாரணையில், காரை திருடியது கிருஷ்ணகிரியை சேர்ந்த பசவப்பாவை, 34 என தெரிந்தது. அசோக்நகர் போலீஸார் பசவப்பாவை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை