ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், நாளை ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது.உலக அசைவுக்கு காரணமான ஆடலரசனை அடிப்படையாக கொண்டு கடைபிடிக்கப்படுவது திருவாதிரை திருவிழா. மார்கழி மாதம் திருவாதிரை நாளில் பகல் முழுவதும் அடியார்கள் விரதத்துடன், சிவ சிந்தனையுடன் இருந்து, இரவு நடக்கும் நடராஜர் மகா அபிஷேகத்தில் கலந்து கொள்வர். அபிஷேகத்துக்கு பின், கோவிலுக்கு செல்ல முடியாதவருக்கு, நடராஜர் புறப்பட்டு வீதி உலா வந்து, அவர்களுக்கு காட்சியளிப்பார். இதனையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுகிறது.ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நாளை, ஆரூத்ரா தரிசன விழா கொண்டாடப்படுகிறது. அதிகாலை, 5.30க்கு ஆருத்ரா அபிஷேகத்துடன் விழா துவங்குகிறது. காலை, 7 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பட்டு வஸ்திரம் சாத்துதல் நடக்கிறது.தொடர்ந்து, பூமாலை, நகைகளுடன், நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. காலை, 9 மணிக்கு நடராஜர் தரிசனமும், கோவில் உள்பிரகாரம், வெளிபிரகாரம் வலம் வருதலும், கும்மி, கோலாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.30க்கு நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. மணிக்கூண்டு, அக்ரஹாரவீதி, கோர்ட் வீதி, மண்டபம் வீதி, மரப்பாலம் வீதி வழியாக ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. இதில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமியை தரிசனம் செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.