கோபிசெட்டிபாளையம்: கடத்தூர் அருகே கள்ளக்காதலியுடன் சென்றவர் மின்வேலியில் சிக்கி பலியானார்.சத்தியமங்கலம் அருகே கோணமூலை அக்கரைநெகமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 52. விவசாயி. வீட்டில் சிறிய கோவில் கட்டி, வாக்கு சொல்லி வந்தார். இவருக்கு, அங்கம்மாள் என்ற மனைவி, பாபு என்ற மகன், தனலட்சுமி என்ற மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பைக்கில் வெளியில் சென்ற சுப்பிரமணி, மீண்டும் வீடு திரும்பவில்லை. கடத்தூர் உக்கரம் மதிப்பானூர் சாலையில் சுப்பிரமணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது அருகில் பைக் கிடந்தது.கோபி டி.எஸ்.பி., ராமசாமி, இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் விசாரித்தனர்.தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனைப்படி, சுப்பிரமணி, விபத்தில் இறக்கவில்லை என தெரியவந்தது.தனது தந்தை சாவில் மர்ம இருப்பதாக சுப்பிரமணி மகன் பாபு, கடத்தூர் போலீஸில் புகார் செய்தார்.போலீஸ் விசாரணையில், "சுப்பிரமணியிடம் வாக்கு கேட்க அடிக்கடி ஒரு பெண் வந்துள்ளார். அவருக்கும், சுப்பிரமணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் வெளியில் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.நேற்று முன்தினம் உக்கரம் அருகே மக்காசோள தோட்டத்துக்கு சென்ற இடத்தில், மக்காசோள தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின் வேலியில் சிக்கி, சுப்பிரமணி பரிதாபமாக இறந்துள்ளார்.இதுபற்றி, அப்பெண் தனது கணவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்பெண், அவரது கணவர், தோட்ட உரிமையாளர் ஆகியோர் சேர்ந்து கொலையை மறைக்க சுப்பிரமணியை தூக்கி வந்து சாலையோரத்தில்போட்டுள்ளனர்,' என தெரியவந்தது.தப்பி ஓடிய மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.