சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் ரோட்டில் தக்காளியை வீசி செல்வதால், அதை எடுக்க போட்டி போட்டு செல்லும் குரங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. பண்ணாரியில் இருந்து, 27 கொண்டைஊசி வளைவுகளை கொண்டுள்ள இந்த மலைப்பாதை வழியாக கர்நாடகா மாநிலம் செல்லும் வாகனங்கள் மற்றும் தமிழக எல்லைப்பகுதியான தாளவாடி மற்றும் கேர்மாளத்துக்கு வாகனங்கள் செல்லும். இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும்.மலைப்பாதையின் இருபக்கத்திலும் அடர்ந்த வனப்பகுதிகள் சூழந்துள்ளன. குரங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. சாதாரண குரங்குகள் மற்றும் அனுமன் மந்தி என்று அழைக்கப்படும் அரிய வகை குரங்குகளையும் இந்த மலைப்பாதையின் இரு பக்கத்திலும் காண முடியும்.இந்த குரங்குகள் ரோட்டின் இரு பக்கத்திலும் உள்ள தடுப்பு சுவர்களில் அமர்ந்து, இந்த வழியாக செல்பவர்கள் ஏதாவது தின்பண்டங்கள் வீசி செல்வர் என எதிர்நோக்கி இருக்கும். குரங்குகள் அமர்ந்துள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்தினால், அருகில் வந்து நின்று இரண்டு கால்களையும் மேலே தூக்கி நின்று கொள்ளும்.குரங்குகளுக்கு தின்பண்டம் போடுவதால், அதை எடுக்க வரும்போது வாகனத்தில் அடிபட்டு இறக்கும் நிலை ஏற்படுகிறது. குரங்குகளுக்கு தின்பண்டங்கள் கொடுக்க வேண்டாம் என வனத்துறையினர் ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.இதை யாரும் மதிப்பதில்லை. குரங்குகளுக்கு பிஸ்கட், பன், பழம் போன்ற தின்பண்டங்கள் கொடுக்கும் நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. குரங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.கர்நாடகா மாநிலத்தில் இருந்து கோவை, த்தியமங்கலத்திற்கு தக்காளி நூற்றுக்கணக்கான வேன்களில் கொண்டு வருகின்றனர். இவர்கள் ரோட்டில் குரங்குகளை பார்த்தால், உடனே தக்காளி பழத்தை எடுத்து வீசிவிட்டு செல்கின்றனர். தக்காளியை குரங்குகள் போட்டி போட்டு சாப்பிடுகின்றன.தக்காளியை எடுக்க வரும்போது, ரோட்டில் வரும் மற்ற வாகனங்களை குரங்குகள் பொருட்படுத்துவதில்லை. வாகனத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. வனத்துறையினர் குரங்குகளுக்கு தக்காளி பழம் கொடுக்கும் வாகன டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வனவிலங்கு பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.