ஈரோடு: நகரில் போக்குவரத்து நெரிசல் மிக்க பிரப் ரோட்டில், நடைபாதை மேம்பாலம் கட்ட, மாநகராட்சி பொறியாளர்கள் நேற்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.ஈரோடு நகரில், பிரப் ரோடு, சவீதா சிக்னல் பகுதியில், கலைமகள் கல்வி நிலையத்துக்கு உட்பட்ட பள்ளிகள், செங்குந்தர் கல்வி நிறுவனங்களுக்கான பள்ளிகள் பல உள்ளன.இவ்விரு பள்ளிகளில், 8,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். எம்.ஜி.ஆர்., சிலை ரவுண்டானா துவங்கி, பிரப் ரோடு, பி.எஸ்.பார்க் வரையில், தனியார் நிறுவனங்கள் அதிகப்படியாக உள்ளன.
காலை, மாலை நேரத்தில், கடுமையான போக்குரவத்து நெரிசலால், அதிகப்படியான விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. போலீஸாரை பணியமர்த்தி, வாகனங்களை சீர்செய்து, மாணவர்கள் சாலையை கடக்க உதவி வருகின்றனர்.வேறு மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்காக செல்லும்போதும், முக்கிய தலைவர்கள் வருகின்ற போதும், இங்கு போலீஸார் இன்றி மாணவர்கள் ரோட்டை கடக்க சிரமம் ஏற்படுகிறது.பிரப் ரோட்டில் கலைமகள் பள்ளி, செங்குந்தர் பள்ளியின் மாணவர்கள், ரோட்டை கடந்து செல்ல ஏதுவாக, மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்தது. மாநகராட்சியில் சார்பில், பிரப் ரோட்டில், சவீதா சிக்னல் பஸ் ஸ்டாப் பகுதியில், நடைபாதை மேம்பாலம் கட்ட முடிவு செய்தனர்நேற்று மதியம், மாநகராட்சி பொறியாளர் ஆறுமுகம் தலைமையில், உதவிக் கமிஷனர் அசோக்குமார், மின்வாரிய உதவி பொறியாளர் பிரபாகரன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பிரப் ரோடு கலைமகள் பள்ளி முன்பாக, நடைபொதை மேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வினை செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.