அரசு கேபிள் டி.வி. டிஜிட்டல் உரிமம் பரிசீலிக்கப்படும்: திவாரி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.க்கு டிஜிட்டல் உரிமம் (டி.ஏ.எஸ் ) தருவது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் மணீஸ்திவாரி கூறினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியிருந்த கடிதத்தில் தமிழ அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்ப டிஜிட்டல் உரிமம் தருவதில் மத்திய அரசு தாமதப்படு்த்துகிறது. உடனடியாக உரிமம் தர வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணீஸ்திவாரி, தமிழக அரசின் கோரிக்கை குறித்துபரிசீலிக்கப்படும். இது தொடர்பாக டிராய் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. டிஜிட்டல் உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழகத்தின் அ.தி.மு.க. எம்.பி.க்கள் என்னை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அவர்கள் தெரிவித்த பின்னர் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரிடம் வலியுறுத்தியது தெரியவந்தது. தற்போது தமிழகத்தில் 11 எம்.எஸ்.ஓ.க்களுக்கு டிஜிட்டல் உரிமம் (டி.ஏ.எஸ்.)வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசு கேபிள் டி.வி.க்கு இன்னும் வழங்கப்படவில்லை. விரைவில் பரிசீலிக்கப்படும் என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniya Bharathi - Geneva,சுவிட்சர்லாந்து
27-டிச-201212:24:18 IST Report Abuse
Subramaniya Bharathi காவேரி பிரச்சனை போலவே இந்த விஷ்யடதிலும் விரைவாக முடிவு எடுக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Vignesh - Coimbatore,இந்தியா
27-டிச-201211:08:16 IST Report Abuse
Vignesh மத்தியில் தி.மு.க. இருக்கும்வரை தமிழகத்துக்கு எந்தவொரு பயனும் கிடைக்கப் போவதில்லை..
Rate this:
Share this comment
Cancel
Sudharsan R - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-201207:29:08 IST Report Abuse
Sudharsan R Center is 100%responsible for power cut, Cauvery river issue and all sorts of problems in Tamil Nadu.
Rate this:
Share this comment
Cancel
B SIVASUBRAMANIYAN S B - chennai,இந்தியா
27-டிச-201207:23:49 IST Report Abuse
B SIVASUBRAMANIYAN S B தமிழக அரசின் இந்த கோரிக்கையை இவ்வளவு நாள் தாமதப்படுத்திய மத்திய அரசின் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து , தண்ணி இல்லா காட்டுக்கு அவர்களை மாற்ற வேண்டும். மேலும் இந்த கோப்புகளை தாமத படுத்த மறைமுக தூண்டுதலாக இருந்த திமுக அமைச்சர்கள் மற்றும் எம் பி க்களை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
27-டிச-201206:59:08 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் ஆனால் மாறனின் கேபிளுக்கு மட்டும் உடனடி லைசென்ஸ்.அவங்க என்னடானா இருக்கிற சானல்களை நிறுத்தி நிறுத்தி தங்களோட செட் டாப் பாக்சை வாங்க வைக்க விளம்பரம் போட்டு விளம்பரம் போட்டு கழுத்தருக்கறாங்க. இதுக்கா கேபிளுக்கு மாசா மாசம் தெண்டம் அழறோம் ? ஒளிபரப்பை இடை நிறுத்தம் செய்து இவங்க ளோட கேவலமான விளம்பரம் போடுவது நுகர்வோர் சட்டப்படியும், ஒளிபரப்பு சட்டப்படியும் குற்றமில்லையா? என்ன முயற்சித்தாலும் பெருமபான்மையினர் அரசு கேபிள் பக்கம்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். .
Rate this:
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
27-டிச-201209:05:52 IST Report Abuse
Hari Dossடிராய்க்கு புகார் செய்ய வேண்டியது தானே...
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
27-டிச-201206:33:43 IST Report Abuse
Guru எப்படியோ.., இந்திய வரலாற்றில் முதல்முறையாக பிரதமருக்கு (சிங்) எழுதிய கடிதத்திற்கு பதில் வந்து இருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்