நாமக்கல்: "மல்லசமுத்திரத்தில், இன்று (டிச.,27), மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது' என, மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இன்று, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்க உள்ளது. இந்த முகாமில், மல்லசமுத்திரம் யூனியன் மற்றும் மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்கள் பங்கேற்கலாம்.அனைத்து பிரிவு சிறப்பு டாக்டர்களும் முகாமில் பங்கேற்க உள்ளனர். முகாமில், தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை மற்றும் உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவு வழங்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.