திருச்செங்கோடு: திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அனைத்து ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டது.மாவுரெட்டி, செம்மாம்பாளையம், அக்கலாம்பட்டி, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதியை சேர்ந்த, 40 பேருக்கு, 4.20 லட்சம் ரூபாய் மதிப்பில் பட்டா, இருவருக்கு நலிந்தோர் உதவித்தொகை வழங்கினார்.தாசில்தார் சத்யநாராயணன், அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.