நாமக்கல்: பெயிண்ட், டிஸ்டம்பர் வருகையால், சூளைகளில் தயார் செய்யப்படும் சுண்ணாம்புகளின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விசேஷ தினங்களில், மக்கள், தங்களது வீடுகளுக்கு வெள்ளையடிப்பது வழக்கம். குறிப்பாக, சூளைகளில் வேக வைக்கப்படும் சுண்ணாம்புக் கற்களை வாங்கும் மக்கள், அவற்றில் தேவையான அளவு தண்ணீர் கலந்து, வீட்டிற்கு வெள்ளையடிப்பர். அவை உடலில் ஒட்டாதவாறு, சில வேதியியல் பொருட்கள் கலப்பது வழக்கம்.இந்த வகை சுண்ணாம்பு, வீடுகளுக்கு அழகு சேர்ப்பதுடன், சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படும். குறிப்பாக, சுவர்களை அரிக்கும் பூச்சிகளில் இருந்து, அவை சுவற்றை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இந்நிலையில், இந்த வகை சுண்ணாம்புகளின் பயன்பாடு, மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.அதற்கு காரணம், பல்வேறு வண்ணங்களில் உற்பத்தி செய்யப்படும் பெயிண்ட், டிஸ்டம்பர் ஆகியவற்றின் வருகையே. மக்களின் பயன்பாடு குறைந்ததால், சுண்ணாம்பு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த பலர், இத்தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்லத் துவங்கியுள்ளனர்கற்சுண்ணாம்பு விற்பனை செய்வோர் கூறியதாவது:சூளைகளில் தயார் செய்யப்படும் சுண்ணாம்பு சிறந்த கிருமி நாசினியாகும். தற்போது இதன் பயனபாடு குறைந்துள்ளது. பெயிண்ட், டிஸ்டம்பர் ஆகியவற்றின் வருகையே இதற்கு முக்கிய காரணமாகும்.தொழில் நசிவு காரணமாக சுண்ணாம்பு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பலர், வெவ்வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். ஒரு சில கிராமப் புறங்களில் மட்டும் இன்றளவும் சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது. அதை சார்ந்தே, ஒரு சிலர் சுண்ணாம்பு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.