ஊட்டி : ஊட்டியில் தமிழ் திருநாடு வீட்டுமனை தரகர்கள் நலசங்கம் முதலாம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், தமிழக அரசு பதிவேட்டில் அமைப்பு சாரா பட்டியலில் நிலத்தரகர் தொழிலையும் சேர்த்து அங்கீகரிக்க மாநில முதல்வரிடம் கோரிக்கை வைப்பது; தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நதிநீரை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு தண்ணீரை திறந்துவிட பாடுபட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊட்டி நகர செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். நீலகிரி மாவட்ட தலைவர் சதீஷ் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் விருகை கண்ணன், செயலாளர் தியாகராஜன், பொருளாளர் வேணுகோபால், துணை தலைவர் பிரபாகரன் ஆகியோர் பேசினர்.
ஊட்டி நகரமன்ற துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் சாந்திஜோகி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் நிக்கோலஸ், ரகுபதி, மாவட்ட நிர்வாகிகள் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் தரகர் சங்க உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
மாவட்ட துணை தலைவர் மகேஷ் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.