ராசிபுரம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் வட்டார வள மையத்தில், உயர் தொடக்கநிலைப் பள்ளியில் ஆறாவது, ஏழாவது, எட்டாம் வகுப்பு படிக்கும் எஸ்.சி.,எஸ்.டி., மாணவ, மாணவியருக்கு, வாழ்வியல் திறன் பயிற்சி முகாம், இரண்டு நாட்கள் நடந்தது.வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜம்மாள் தலைமை வகித்தார். ஏ.இ.இ.ஓ., அசோக்குமார் பயிற்சியை துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் பேபி, ஆசிரியர் ஜாய்ஸ் குளோரி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.பயிற்சியில், தன்னைத்தானே அறிதல், அடையாளம் கண்டு கொள்ளல், பயம், வெட்கம், தயக்கம் ஆகியவற்றில் இருந்து விடுபடுதல், சரி, தவறு போன்ற நேர்மறை எண்ணங்களை உயர்த்துவது குறித்து விளக்கப்பட்டது.மேலும், குழந்தை தொழிலாளர் குறிக்கோள், தியானம், யோகா மற்றும் நலவாய்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில், 50 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.