ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், பொக்கலைன் இயந்திரம் மூலம் மரவள்ளியை விவசாயிகள் அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, மங்களபுரம், ஆயில்பட்டி மற்றும் வெண்ணந்தூர் சுற்றுவட்டாரத்தில், மரவள்ளி சாகுபடி கணிசமான ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது.இந்தாண்டு, மேற்குறிப்பிட்ட பகுதிகளில், பரவலாக மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனினும், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. தவிர, கூலியாட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே, தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள மரவள்ளியை, நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார விவசாயிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தொட்டிப்பட்டியை சேர்ந்த விவசாயி பழனிவேல் கூறியதாவது:வறட்சி காரணமாக, அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள மரவள்ளியை நிலததில் இருந்து பிடுங்க இயலவில்லை. அறுவடை செய்ய தாமதம் ஏற்பட்டால், கிழங்கு இறுகிவிடும். அதனால் அவற்றை விற்பனை செய்ய இயலாது.எனவே, பொக்லைன் மூலம் மரவள்ளி அறுவடை செய்யப்படுகிறது. போதிய மழை இல்லாததால், கடந்த ஆண்டு ஏக்கருக்கு, 50 முதல், 60 மூட்டை மட்டுமே விளைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.