ராசிபுரம்: வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்தில், 25 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் ஏலம் போனது. ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில், 636 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. அதில், விராலி ரகம் அதிக பட்சமாக ஒரு மூட்டை,8,009 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக, 4,959 ரூபாய்க்கும் ஏலம் போனது. அதேபோல், குண்டு ரகம் அதிகபட்சமாக ஒரு மூட்டை, 5,739 ரூபாய்க்கும், குறைந்த பட்மாக, 3,909 ரூபாய்க்கும் விலை போனது.மேலும், பனங்காலி ரகம் அதிக பட்சமாக ஒரு மூட்டை, 13 ஆயிரத்து, 399 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, 8,669 ரூபாய்க்கும் ஏலம் போனது. ஒரே நாளில், 25 லட்சம் ரூபாய் அளவுக்கு மஞ்சள் விற்பனையானது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.