திருச்செங்கோடு: பால் லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில், ஒருவர் படுகாயமடைந்தார்.திருச்செங்கோட்டில் இருந்து, சேலம் நோக்கி, "எஸ்.எம்.பி.எஸ்.,' என்ற தனியார் பஸ், நேற்று அதிகாலை, 5.00 மணிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை, பாவனியை சேர்ந்த சதீஸ், 27, என்பவர் ஓட்டிச் சென்றார். திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்ற அந்த பஸ்சில், "ஹெட்லைட்' எரியவில்லை. அதிகாலை, 5.30 மணிக்கு, மல்லசமுத்திரம் அடுத்த அறுபதாம்பாறை என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த பால் லாரி மீது, பஸ் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில், பஸ்சின் பின்புறம் அமர்ந்து பயணம் செய்த வட்டூரை சேர்ந்த ராஜா, 26, என்பவர் படுகாயமடைந்தார். ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மல்லசமுத்திரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.