திருப்பூர் : திருப்பூர்
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதார பணியை மேற்கொள்ள போதுமான
ஊழியர்கள் இல்லை. அதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மாவட்ட
தலைமை அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளாக தினமும் 150 பேர்
அனுமதிக்கப்படுகின்றனர். பிரசவத்துக்கு 30 கர்ப்பிணிகள்
அனுமதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் பகுதி, ஆண், பெண் பொதுப்பிரிவு
செயல்படுகிறது. நோயாளிகளை பார்க்க 300க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து
செல்கின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் சுகாதார பணி படுமோசமாக உள்ளது. 30
பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 18 பேரே உள்ளனர். இதில், மூவர்
புறநோயாளிகள் பிரிவில் பணிபுரிகின்றனர். சுகாதார பணியாளர்கள் கட்டாயம் 15
பேராவது இருந்தால் மட்டுமே, குப்பை அள்ளுவது, கழிவுகளை சுத்தம் செய்வது
உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.
தற்போது, நான்கு பேர் மட்டுமே
உள்ளனர். இதில், ஒருவர், துணிகளை சலவை செய்யும் பகுதியில் "டியூட்டி'
பார்க்கிறார். இன்னொருவர் புறநோயாளிகள் பிரிவு செல்கிறார்; மீதமிருக்கும்
இரண்டு பேர், ஒட்டுமொத்த மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பது
சிரமமான காரியம்.
அறுவை சிகிச்சை பிரிவு விரிவுபடுத்தும் பணி நடப்பதால்,
மேல் தளத்தில், இணை இயக்குனர் அறை அருகே இருந்த பிரசவ வார்டு, தீவிர அவசர
சிகிச்சை பிரிவு அருகே மாற்றப்பட்டுள்ளது. குழந்தை பிறந்ததும், தாயையும்,
சேயையும், 200 மீட்டர் தூரத்தில் உள்ள சாதாரண வார்டுக்கு மாற்ற வேண்டும்.
அவர்களை, "ஸ்ட்ரெச்சரில்' அழைத் துச் செல்லக்கூட ஆளில்லாத நிலை உள்ளது.
பணியாளர்கள் கூறியதாவது:
மொத்தம்
16 சுகாதார பணியாளர்கள், 25 மருத்துவமனை பணியாளர்கள் இருந்தனர். தனியார்
ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் நியமிக்கப்பட்டதால், பணிச்சுமையை குறைக்க,
இங்கிருந்த சுகாதார பணியாளர்கள், உடுமலை, காங்கயம், தாராபுரம், பல்லடம்
அரசு மருத்துவமனைகளுக்கு "டிரான்ஸ்பர்' செய்யப்பட்டனர். தற்போது தனியார்
நிறுவன ஒப்பந்த பணியாளர்களும் குறைவாக உள்ளனர், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.