Advertisement
சிறுபூலுவப்பட்டி கிராமத்தில் தபால் பட்டுவாடா செய்வதில்லை::பொதுமக்கள் புகார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2012,02:58 IST

திருப்பூர் : சிறுபூலுவப்பட்டி கிளை தபால் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அனுப்பப்படும் தபால்கள் சென்றடையவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
திருப்பூர், சிறுபூலுவப்பட்டியில் கிளை தபால் அலுவலகம் உள்ளது. சிறுபூலுவப்பட்டி, எம்.ஜி.ஆர்., நகர், மகா சக்தி நகர், அத்திமரத்தோட்டம், மாஸ்கோ காலனி, சாமுண்டிபுரம் தெற்கு, காலேஜ் நகர், கருப்பராயன் கோவில் பின்புறம் உட்பட 15 குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வரும் தபால்கள், இக்கிளை தபால் அலுவலகம் வழியாக, "டெலிவரி' செய்யப்படும். கடந்த ஆறு மாதமாக, தபால்கள், சரியாக வழங்கப்படுவதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மகா சக்தி நகர் மக்கள் கூறுகையில், "சமையல் காஸ் நிறுவனத்தில் இருந்து, அழைப்பு மற்றும் தகவல் கடிதம், 10 நாட்களுக்கு முன், தபால் அலுவலகம் மூலம் அனுப்பியுள்ளனர். ஆனால், எங்களுக்கு "டெலிவரி' செய்யவில்லை. விவரங்களை கேட்டு நாங்களே தபால் அலுவலகத்துக்கு சென்று, தபால்களை எடுத்து வந்தோம்.
"தனியார் கம்பெனிகள், அனுப்பிய நேர்முகத்தேர்வு தபால்கள் உட்பட பல கடிதங்கள் எங்களுக்கு வரவில்லை. அலுவலகத்துக்கு சென்று அதிகாரியிடம் கேட்டால், ஆள் பற்றாக்குறையாக இருப்பதால், இதுபோன்ற தவறுகள் ஏற்படுகின்றன என கூறுகிறார்,' என்று புலம்பினர்.
திருப்பூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சிதம்பரத்திடம் கேட்ட போது,""இதுபோன்ற தவறு, எனது கவனத்துக்கு வரவில்லை. உடனடியாக, சம்பந்தப்பட்ட கிளை தபால் அலுவலகத்துக்கு சென்று ஆய்வு செய்யப்படும். இனி, தவறு நடைபெறாமல் இருக்க
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.