பொள்ளாச்சி : பொள்ளாச்சி- பாலக்காடு மாநில நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி பாதையாக மாற்றும் பொருட்டு ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி- பாலக்காடு மாநில நெடுஞ்சாலை பிரதான சாலையாக உள்ளது. பொள்ளாச்சி - கோபாலபுரம் வழியாக கேரள பகுதியான பாலக்காடு மற்றும் இதர பகுதிகளுக்கு செல்ல இச்சாலை பயன்படுகிறது.
இந்நிலையில், சாலை குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சியிலிருந்து -கோபாலபுரம் வரை 15.8 கிலோ மீட்டர் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இச்சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் விடுத்த கோரிக்கையின் பேரில் நான்கு வழி பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஆறுமுகம் கூறுகையில்,""பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டு அருகில் ராமானுஜா ஹோட்டல் முதல் ரயில்வே கேட் வரை ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் அறிவிக்கப்பட்டு விரைவில் பணிகள் துவங்கும்,'', என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.