district news | வீதிகளில் வீணாக வழிந்தோடும் குடிநீர் சொக்கம்புதூரில் எல்லாமே "சொதப்பல்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீதிகளில் வீணாக வழிந்தோடும் குடிநீர் சொக்கம்புதூரில் எல்லாமே "சொதப்பல்'

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கோவை மாநகராட்சி 77வது வார்டை உள்ளடக்கிய சொக்கம் புதூர், ஜீவா ரோடு, ராமமூர்த்தி ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், அவ்வழியே செல்லும் குழாய்கள் உடைந்து பல மணி நேரம் குடிநீர் வீணாகிறது.
பாதுகாப்பற்ற கிணறு, தெருவிளக்கு பிரச்னை, சாக்கடை அடைப்பு என பிரச்னை மேல் பிரச்னை உள்ளதாக, சொக்கம்புதூர் மக்கள் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.
சொக்கம்புதூர் வடக்கு, ஹவுசிங் யூனிட், கோவை நரசிபுரம் ரோடு, குமாரசாமி குளக்கரை முதல் பழைய மேற்கு தொகுதி எல்லை வரையும், பழைய பேரூர் தொகுதி எல்லை முதல் அண்ணாரோடு வரை, தெலுங்குபாளையம்புதூர் கிழக்கு உட்பட மாநகராட்சியின் பழைய 56வது வார்டு பகுதிகள் தற்போது 77வது வார்டில் அடங்கும்.
இதில், ஜீவா ரோடு முதல் ராமமூர்த்தி ரோடு வரை படுமோசமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளா கின்றனர்; அவ்வழியே செல்லும் குழாய்கள் உடைந்து குடிநீரும் வீணாகி வருகிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது :
செந்தில்(கட்டட தொழிலாளி)
ஜீவா ரோட்டிலிருந்து, ராமமூர்த்தி ரோடு வரை 2 கி.மீ., ரோடு படுமோசமாக உள்ளது. வாகனங்கள் சிரமப்பட்டே செல்லவேண்டிய நிலை உள்ளது. இந்த ரோடு வழியாக செல்லும் குடிநீர் குழாய்கள் உடைந்து இன்னும் சரிசெய்யப்படாமல் உள்ளது. சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேலாக குடிநீர் வீணாகிறது. ஒரு சில தெரு விளக்குகள் எரிவதில்லை. மின் கம்பங்களும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
சதீஸ்(சுயதொழில்)
கருப்பண்ண பாதை நுழைவில், ரோட்டோரத்திலே பாதுகாப்பற்ற நிலையில் ஒரு கிணறு உள்ளது. கிணற்றை சுற்றி தடுப்புச் சுவர் இல்லாமல், புதர் மண்டியுள்ளதால், வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சாக்கடை கழிவுகள் உடனுக்குடன் அகற்றாததால் துர்நாற்றமும் வீசுகிறது.
அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் நலச்சங்க செயற்குழு உறுப்பினர் சாந்தா கூறியதாவது:
மொத்தம் ஏழு வீதிகளை கொண்ட இந்திரா நகரில் 148 வீடுகள் உள்ளன. இங்கு சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், சொந்த செலவில் குழாய்கள் பதித்து கழிவுநீர் வெளியேற்றி வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வாக சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.
சிவாலயா தியேட்டர் அல்லது காந்திபார்க் சென்றால் மட்டுமே பஸ் கிடைக்கும். நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதால் பஸ் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். அனைவரும் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க ஆர்வமாக உள்ளதால், தனியார் அமைப்பும், அரசும் மரங்கள் வழங்கினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம்.
நவநீதன் (வியாபாரி )
இந்திரா நகர் மேற்குவீதி-4 நுழைவிலுள்ள மின் கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. பள்ளி வாகனங்கள் கடந்து செல்ல முடிவதில்லை; உராய்வு காரணமாக மின் தடை ஏற்படுகிறது. "கட்' ரோடுகளில் தெரு விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து கிடக்கிறது.
மேயரிடம் முறையிட்டுள்ளேன்
77 வது வார்டு கவுன்சிலர் லதா கூறியதாவது: பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்தவுடன், ரோடு போடும் பணி துவங்கும். இந்திராநகர் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க மேயரிடம் முறையிட்டுள்ளேன். அபாய மின் கம்பங்கள் மற்றும் தொங்கும் மின் ஒயர் உள்ள கம்பங்களை இடமாற்ற மின் வாரியத்துக்கு கடிதம் அளித்துள்ளேன். கிணற்று உரிமையாளரிடம் பாதுகாப்புஅமைக்க வலியுறுத்தியுள்ளேன். விரைவில் இதற்கான தீர்வு காணப்படும்
இவ்வாறு கவுன்சிலர் லதா கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை