கோவை : சின்ன வெங்காயம் அதிளவில் வருவதால் இதன் விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
கடந்த
சில மாதங்களாக சின்னவெங்காயம் கிலோ ரூ. 40 முதல் ரூ. 45 வரை விற்பனையானது.
இதனால், வெங்காயம் பெயர் சொன்னாலே கண்ணீர் வந்தது. ஆனால், சில நாட்களாக
மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்திருப்பதால் விலையும்
வீழ்ச்சியடைந்து
வருகிறது.
கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில்
செயல்படும் எம்.ஜி.ஆர்.மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர்
பழனிச்சாமி, செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் கூறியதாவது: கடந்த மூன்று
மாதங்களாக விலை உயர்ந்திருந்த சின்ன வெங்காயத்தின் விலை, இப்போது சரியத்
துவங்கி உள்ளது. தற்போது, துறையூர், ராசிபுரம், நாமக்கல், சத்தியமங்கலம்,
குருரெட்டிபட்டியில் இருந்து சின்ன வெங்காயத்தின் வரவு அதிகரித்துள்ளது.
இப்பகுதியில் தினமும் வெங்காயம் அறுவடை நடந்து வருகிறது.
தினமும், 50
கிலோ எடை கொண்ட மூட்டைகள் 1500 முதல் 2000 வரை வருகின்றன. கடந்த வாரம் கிலோ
32 முதல் 40 ரூபாய் வரை விற்ற சின்ன வெங்காயம், இன்று, 30 முதல் 35 வரை
விற்கப்படுகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு சின்ன வெங்காயம்
அதிகபட்சம் கிலோ ரூ. 59 வரை விற்கப்பட்டது. அதற்குப் பிறகு, இந்தாண்டுதான்,
இதன் விலை சில்லரை மார்கெட்டில் கிலோ 60 ரூபாய் வரை சென்றுள்ளது.
எம்.ஜி.ஆர்.,
மார்க்கெட்டிற்கு தினசரி 12 முதல் 15 லாரி லோடு, பெரிய வெங்காயம்
வருகிறது. ஒரு லாரியில் 15 முதல் 16 டன் வரை மூட்டைகள் வரும். கடந்த வாரம்,
கிலோ 20 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், இப்போது அதிகபட்சம் 18 ரூபாய்க்கும்
குறைந்தபட்சம் 13 ரூபாய்க்கும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்தாண்டு
துவக்கத்தில், கிலோ ஆறு முதல் ஏழு வரை மொத்த விற்பனை விலையாக இருந்த பெரிய
வெங்காயம், 18 ரூபாய்க்கு வந்துள்ளது.
பூண்டு வீழ்ச்சி
வடமாநிலங்களான
ராஜஸ்தான், இமாச்சல்பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து பூண்டு வரத்து,
ஆண்டு முழுவதும் இருக்கும். இந்தாண்டு, அந்த மாநிலங்களில் பூண்டு விளைச்சல்
அமோகமாக உள்ளது. கடந்த ஆண்டு கிலோ 240 ரூபாய் வரை உச்சத்திற்கு சென்ற
பூண்டு, இப்போது தரமான பூண்டு 12 முதல் 14 ரூபாய்க்கு இறங்கிவிட்டது.
தினமும், பூண்டு லாரிகள் நான்கு முதல் ஐந்து வரை, கோவைக்கு
வந்துகொண்டுள்ளன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.