அன்னூர் : அன்னூர் வட்டாரத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு 15 நாள் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை
மாவட்டத்தில் அன்னூர் வட்டாரத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்து
கணக்கெடுக்கப்பட்டது. இதில் 73 பேர் கண்டறியப்பட்டனர். கஞ்சப்பள்ளியில்
உள்ள குறுகிய கால சிறப்பு பயிற்சி மையத்தில் 21பேர் பயிற்சி பெறுகின்றனர்.
மீதி 52 பேர் எல்லப்பாளையம் மற்றும் வடக்கலூர் நடுநிலைப்பள்ளிகள்,
கெம்பநாயக்கன்பாளையம் உயர்
நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். அவர்களது வயதுக்கேற்ற வகுப்பு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.
இவர்களுக்கு
கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு, அனைவருக்கும் கல்வி
இயக்கம் சார்பில், முதல் கட்டமாக 15 நாள் பயிற்சி வகுப்பு அன்னூர் வடக்கு
துவக்கப்பள்ளியில் நடந்தது. சி.எஸ்.சி., நிறுவன ஆசிரியர்கள்
பயிற்சியளித்தனர்.
அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மேற்பார்வையாளர்
அண்ணாதுரை பேசியதாவது:தனியார் பள்ளிக்கு மேலாக அரசு பள்ளியில் கம்ப்யூட்டர்
கற்பிக்கப்படுகிறது. ஐந்து கம்ப்யூட்டர்களில், பவர் பாயின்ட்
விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். வட்டார
உதவி தொடக்க கல்வி அலுவலர் ரங்கராஜ் பேசுகையில்,""பள்ளி செல்லாத
குழந்தைகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படுகிறது,''
என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.