அன்னூர் : தாலுகா அலுவலகத்திற்கான கருவூல கட்டணம் செலுத்த, கோவை செல்ல வேண்டியுள்ளதால் அன்னூர் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அன்னூர்
தாலுகா அலுவலகம் கடந்த நவம்பர் 22, முதல் செயல்படுகிறது. இறப்பு சான்று
உள்ளிட்டவைகளுக்கு கருவூல கட்டணம் செலுத்தி, அந்த சலானை இணைத்து,
சான்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக கோவை சென்று வர வேண்டி உள்ளது.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு சார்பில், தமிழக முதல்வர், கோவை கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
அன்னூர்
தாலுகா அலுவலகத்தில் சார்நிலை கருவூலம் ஏற்படுத்தப்படாததால், அன்னூர்
தாலுகா அலுவலகத்தில் முத்திரை பெற்று, அதன்பின், கோவை நகரில் உள்ள ஸ்டேட்
பாங்க் ஆப் மைசூரில் கட்டணம் செலுத்தி, அந்த சலானுடன் மீண்டும் அன்னூர்
அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டி உள்ளது.
பல்வேறு சான்றுகளுக்கு,
கோவைக்கு அலைய வேண்டி உள்ளது என்பதால்தான் அன்னூர் தாலுகாவிற்காக மக்கள்
போராடினர். இப்போது, தாலுகா அலுவலகம் அமைந்தபின்பும், கருவூல கட்டணம்
செலுத்த கோவை செல்ல வேண்டியிருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். அன்னூரில்
உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையிலேயே கருவூல கட்டணம் செலுத்த அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
அன்னூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தாலுகா அலுவலகம் 2
கி.மீ., தொலைவில் உள்ளது. பெரும்பாலான பஸ்கள் தாலுகா அலுவலகத்தில் நிறுத்த
மறுக்கின்றன.
இதனால் மக்கள் நீண்ட தொலைவு நடக்க வேண்டியுள்ளது. கோவை
மற்றும் சத்தி செல்லும் அனைத்து பஸ்களும் தாலுகா அலுவலக ஸ்டாப்பில்
நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.