கோவை: வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் மாநாடு கோவையில் இன்று நடக்கிறது.
பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மீதான
(வன்கொடுமை தடுப்பு)சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தேசிய கூட்டமைப்பு சார்பில் இன்று கோவையில் மாநாடு நடக்கிறது.
திவ்வோதயா ஹாலில் காலை 10.00மணிக்கு துவங்கி மாலை 5.30 மணிக்கு முடிவடைகிறது.
தலித், ஆதிவாசி இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், வக்கீல்கள், பஞ்சாயத்து தலைவர்கள் என 250 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
வன் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் மாநாட்டில் பங்கேற்று, தங்களது அனுபவங்களை தெரிவிக்கின்றனர்.
""வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் மீது போலியான எதிர்வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்படுகின்றன.
இத்தகைய
நிலையில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை வலுப்படுத்தி சிறப்பான முறையில்
அமல்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் இச்சட்டத்தை
திருத்த வேண்டும்.
திருத்தப்பட்ட வன்கொடு தடுப்புச்சட்டத்தில் இன்னும்
கூடுதலான குற்றவகைகளை இணைத்தல், இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள
தண்டனைகளுக்கு இணையாக மாற்றுத்திட்டமிடல், விரைவான விசாரணைக்கான உரிமையை
உறுதி செய்தல், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் உரிமைகளை
அங்கீகரித்தல், சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில வார்த்தைகள் நீக்குதல்
உள்ளிட்ட தீர்மானங்கள் பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.