கோவை: கோவையில்
நாளை முதல் மூன்று நாட்களுக்கு கால்நடை மருத்துவ கண்காட்சி நடக்கிறது.
விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பார்வையிடும் வகையில், இந்த
கண்காட்சி கோவை நகரில் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு கால்நடை பல்கலை
தமிழகத்தில் பல மண்டலங்கள் வாரியாக கால்நடை கண்காட்சியை நடத்த முடிவு
செய்துள்ளது. கோவை மண்டலத்தில் கால்நடை மற்றும் மீன் வள தொழில்நுட்ப
கண்காட்சியாக கால்நடை கண்காட்சி நடத்தப்படுகிறது.
சா#பாபா காலனியில் உள்ள
ராமலிங்கம் செட்டியார் மேல்நிலை பள்ளியில் நாளை முதல் கண்காட்சி துவங்கு
கிறது.
கால்நடை மற்றும் மீன் வளர்ப்பில் உற்பத்தி திறனை மேம்படுத்தி,
உற்பத்தி
செலவை குறைத்து லாபகரமான கால்நடை மற்றும் கோழி வளர்ப்புக்கு தேவையான
அறிவியல் தொழில்நுட்பங்கள் கிராமங்களை சென்றடையும் வகையில் கண்காட்சி
அமையும்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் திருச்சியிலும், செப்டம்பரில்
திருநெல்வேலியிலும் நடந்த கண்காட்சிக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, ஈரோடு,
திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில்
கோவையில் நடத்தப்படுகிறது.
கோவையில் நாளை தொடங்கும் இந்த கண்காட்சி
டிச.30ம் தேதி நிறைவு பெறுகிறது. 83 அரங்குகளை கால்நடை பல்கலை
அமைத்துள்ளது. 73 ஸ்டால்களில் முழுக்க முழுக்க அரசு சார்ந்த நிறுவனங்களும்,
கால்நடை பல்கலை, கல்லூரிகளுமே தகவல்களை அள்ளித்தர ஸ்டால்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
நீர் வாழ் உயிரினங்கள், தரை வாழ் உயிரினங்கள்,
பறவையினங்கள் இவற்றை வளர்க்கும் முறைகள் போன்றவை இந்த ஸ்டால்களில் இடம்
பெறுகின்றன. கோழி வளர்ப்பில் மட்டுமே 13 வகையான கோழியினங்கள் வளர்க்க
விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
ஆடு, மாடு, பன்றி உள்ளிட்ட பல்வேறு
கால்நடை வளர்ப்புகளும் இடம் பெறுகின்றன. மீன் வளர்ப்பிலும் புதிய
தொழில்நுட்பங்கள், நுணுக்கங்களை கற்றுத்தர உள்ளனர். கால்நடை அறிவியல்
கல்வியை நேரடியாக விவசாயிகளுக்கு அளிக்க வாய்ப்பாக இக்கண்காட்சி ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளான பூனை, நாய் உள்ளிட்ட பிராணிகள்
வளர்ப்பும், அவைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய தடுப்பூசி முறைகள் பற்றியும்
விளக்கம் அளிக்கப்படுகின்றன.
கண்காட்சி காலை 11.00மணிக்கு துவங்கி
மாலை 7.00மணிக்கு நிறைவு பெறுகிறது. மாலையில் மாணவ, மாணவியரின் கலை நடன
நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
கண்காட்சி துவக்க விழாவில் கால்நடை
மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் பிரபாகரன் வரவேற்கிறார். வேளாண்மை
துறை அமைச்சர் தாமோதரன் தலைமை வகிக்கிறார். கால்நடை பராமரிப்பு துறை
அமைச்சர் சின்னையா கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். மீன்வளத்துறை அமைச்சர்
ஜெயபால் சிறப்புரையாற்றுகிறார். .
அரசு அதிகாரிகள், வேளாண்மை,
கால்நடை துறை பேராசிரியர்கள்,
நிபுணர்கள் பங்கேற்று விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.
அடுத்த
நாள் டிச.29ல், செல்லப்பிராணிகள் கண்காட்சி நடக்கிறது. இதில், போலீஸ்
மோப்ப நாய்கள் உட்பட பல்வேறு சிறப்பு திறன் மிக்க நாய்களும் கண்காட்சியில்
இடம் பெறுகின்றன. மாலை 1.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை இக்கண்காட்சி
நடக்கிறது.
கண்காட்சியில், இவற்றை வளர்க்கும் முறைகள்,பராமரிப்பு முறைகளும் இடம் பெறுகின்றன.
நிறைவு நாள் நிகழ்ச்சி டிச.30ல் மாலை 4.00 மணிக்கு நடக்கிறது. துணைவேந்தர் பிரபாகரன் வரவேற்கிறார்.
தமிழ்நாடு
வேளாண்மை பல்கலை துணைவேந்தர் ராமசாமி கண்காட்சி பற்றிய கருத்துரை
வழங்குகிறார். மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமை வகிக்கிறார். கால்நடை
பராமரிப்பு துறை மற்றும் மீன் வளத்துறை சுகன்தீப்சிங் பேடி
நிறைவுரையாற்றுகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.