பேரூர்: காட்டுப்பகுதியிலிருந்து
ஊருக்குள் நுழையும் யானைக்கூட்டத்தை மீண்டும் வனத்தில் துரத்துவதற்காக
அழைத்து வரப்பட்ட "கும்கி' யானைகள் முழுநேரமும் முகாமிலேயே ஓய்வில்
இருப்பதால்; வனப்பகுதி கிராமமக்கள், மற்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்னர்.
வனத்துறையினரும் கண்டுகொள்வதில்லை.
கோவை மேற்கு மலைத்தொடர்ச்சி அருகே
உள்ள போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை
உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகள் விவசாய
நிலம், குடியிருப்பு பகுதிகளில் ஊடுருவுவது அதிகரித்து வருகிறது.
இதனால்,
விவசாய நிலம், குடியிருப்பு பகுதி சேதம் அடைவதோடு, சில நேரங்களில்
உயிரிழப்பும் ஏற்படுகிறது. வனத்துறையினர் வழக்கம் போல் ரோந்து வந்து,
பட்டாசை வெடித்து காட்டுயானைகளை மீண்டும் வனத்தில் விரட்டினாலும்
மீண்டும்...மீண்டும்... விவசாய நிலங்களை "குறி' வைத்து காட்டு யானைகள்
வருகிறது.
இப்பிரச்னைக்கு தீர்க்க, போளுவாம்பட்டி வனச்சரக பகுதியில்
மலையோரப் பகுதியில் அகழி தோண்டப்பட்டது. ஆனால், பல இடங்களில் பாறைகள்
இருந்ததால் முழுமையாக அகழி தோண்டவில்லை.
இதனால், பச்சாபாளையம்,
தீத்திபாளையம், கரடிமடை, குப்பேபாளையம், தாளியூர், கெம்பனூர், ஆலாந்துறை,
கள்ளிப்பாளையம், மருதமலை அடிவார பகுதி, கணுவாய் உள்பட பல்வேறு
கிராமங்களில், இரவு நேரங்களில் ஊடுருவும் காட்டுயானைகளை ஊர்பொதுமக்களே
விரட்டியடிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
கும்கி யானைகள் வந்தது :
இந்நிலையில்,
பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பிலிருந்து நஞ்சன்(52), பாரிவள்ளல்(35)
ஆகிய இரண்டு கும்கியானைகள், போளுவாம்பட்டி வனச்சரக பகுதிக்கு, கடந்த
ஜூலையில் அழைத்து வரப்பட்டது. இவர்களுக்காக கோவை குற்றாலம் செல்லும்
வழியில் உள்ள சாடிவயலில் யானைகள் முகாமும் அமைக்கப்பட்டது.
ஊருக்குள்
நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தி, மீண்டும் வனப்பகுதிக்கு வழி
அனுப்பி வைக்கும் பணியை கும்கி யானைகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால்,
கொடுக்கப்பட்ட பணியை செய்யாமல் கும்கிகள் ஓய்விலேயே உள்ளது.
இதனால்,
காட்டு யானைகள் ஒரே பகுதியில் "விசிட்' செய்யாமல் தினமும் ஒவ்வொரு பகுதியாக
இடம் பெயர்ந்து சென்றதால் ஆங்காங்கே ஒரு சில வனத்துறை ஊழியரோடு சேர்ந்து,
பொதுமக்களே காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இப்பகுதிகளில் "கும்கி' யானைகளை அனுப்பக்கோரி, வனத்துறைக்கு பொதுமக்கள் வலியுறுத்தினாலும், வனத்துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இதற்கு முறையான காரணங்களை வனத்துறையினர்
கூறுவதில்லை. இதனால், "காட்டு யானைகளால் விவாய நிலங்கள் சேதம் ஆவது தொடர்கதையாகவே உள்ளது' என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து,
போளுவாம்பட்டி வனச்சரக பாரஸ்டர் மணிகண்டனிடம் கேட்டபோது,""முகாமில் தங்க
வைக்கப்பட்டுள்ள கும்கிகள், மாவட்ட வனஅலுவலரின் உத்தரவின் பேரில் மட்டுமே
வெளியே செல்ல அனுமதிக்கப்படும்.
நீண்டதூரம் ரோட்டில் நடப்பதை
தவிர்க்கவே, லாரிமூலம் கும்கிகள் கொண்டு செல்லப்பட்டு, காட்டுயானைகளை
விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.