பன்றிகளின் வசிப்பிடமாக மாறிய நொய்யல் வாய்க்கால் :சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பேரூர் : பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நொய்யல் வாய்க்கால், குப்பைகள் கொட்டப்பட்டு பன்றிகளின் வசிப்பிடமாக மாறி வருகிறது;இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி உள்ளது. ஊராட்சிக்குட்பட்ட பேரூர் செட்டிபாளையத்திலுள்ள, துணைசுகாதார நிலையத்துக்கு பின்புறம் நொய்யல் கிளை வாய்க்கால் செல்கிறது.
நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரைச்சாவடி அணைக்கட்டிலிருந்து, குளங்களுக்கு தனித்தனியே தண்ணீர் பிரிக்கப்படுகிறது. பேரூர்செட்டிபாளையம் குளத்திலிருந்து, பிரிக்கப்
படும் தண்ணீர் நொய்யல் கிளை வாய்க்கால் வழியே சுண்டக்காமுத்தூர் செங்குளத்துக்கு செல்கிறது. இந்த வாய்க்கால், பேரூர்செட்டிபாளையம் அரசு துணை
சுகாதார நிலையத்துக்கு பின்புறமாக செல்கிறது.
கடந்த பல மாதங்களாக, வாய்க்கால் பகுதியில், ஓட்டல், கோழி, மீன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இக்கழிவுகளை உட்கொள்வதற்காகவே, ஒருசிலர் பன்றிகளை வளர்க்கின்றனர். இதனால், பன்றிகளின் வசிப்பிடமாக இந்த வாய்க்கால் மாறியுள்ளது.
சுகாதார நிலையத்திலிருந்து காலாவதியான மருந்துகள், ஊசிகளும் வாய்க்காலுக்குள் வீசப்படுகின்றன. வாய்க்காலின் இடது மேற்புரம் குடியிருப்புகளும் உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
சுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி துணைதலைவர் மேகராஜ் கூறுகையில்,""சுகாதாரமற்ற வாய்க்கால் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, எம்.எல்.ஏ., நிதியின் கீழ், ரூ. 7.25 லட்சத்தில் பழுதடைந்த பாலத்துக்கு பதிலாக, நடைபாதையுடன் கூடிய புதிய பாலம் கட்டப்படவுள்ளது.
""சுகாதாரமான முறையில் வாய்க்கால் பகுதியை பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
பொதுப்பணித்துறையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,""பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ஊராட்சி நிர்வாகத்திடமும் குப்பைகள் கொட்டக்கூடாதென எச்சரிக்கப்பட்டுள்ளது,''என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்