பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையத்தில்
நடந்த மனுநீதி நாள் முகாமில், வருவாய் துறை சார்பில், 2 கோடியே 22 லட்ச
ரூபாய் மதிப்பு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் கருணாகரன் வழங்கினார்.
நரசிம்மநாயக்கன்பாளையம் அரசுயர் பள்ளியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் ஆனந்தன் வரவேற்றார்.
கலெக்டர்
கருணாகரன் பேசுகையில்,"" கடந்த ஆண்டு பசுமை வீடுகள் திட்டத்தில், அனைத்து
வீடுகளும் கட்டப்பட்டு விட்டன. இத்திட்டத்தில், இந்த ஆண்டுக்கான வீடுகள்
கட்டும் பணி நடந்து வருகிறது. இதே போல, தாய் திட்டத்து பணிகளும் முழுமையாக
நிறைவேற்றப்பட்டு வருகிறது.
விலையில்லா ஆடுகள் திட்டத்தில் 7 கோடி
ரூபாய் செலவில் கடந்த ஆண்டு 2,944 பேருக்கு ஆடுகள் வழங்கப்பட்டன. இந்த
ஆண்டு 2,913 பேருக்கு வழங்கப்படுகிறது,'' என்றார்.
முகாமில், முதியோர்
ஓய்வு ஊதிய திட்டத்தில், 89 நபர்களுக்கும் மற்றும் ஆதரவற்ற நபர்கள்,
மாற்றத் திறனாளிகள் உள்ளிட்ட 8 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை,
20 பேருக்கு கல்வி உதவிதொகை ஆகியவற்றுக்கான உத்தரவுகள் வழங்கப்
பட்டன.
இருளர் சாதி சான்று 47 பேருக்கும், வருவாய் துறை சார்பில், 131 பேருக்கு 2 கோடியே 22 லட்சம்
மதிப்புள்ள வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.