கோவை : "தமிழகத்தில்
உள்ள மின் திட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரமும்,
தமிழகத்துக்கே வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டு
நடவடிக்கைக் குழு (டேகா)வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர் பாலசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில்
தற்போது 40 சதவீதத்துக்கும் அதிகமாக மின் பற்றாக்குறை உள்ளது. பருவ மழை
பொய்த்ததால், விவசாய பாசன வசதிக்காகவும் அதிகளவு மின்சாரம் தேவைப்படுகிறது.
வறட்சியால் இனி வருங்காலங்களிலும் மின் தேவை அதிகரிக்கும்.
இதனால்,
தமிழகத்தில் உள்ள அனைத்து மின் திட்டங்களிலும் உற்பத்தியாகும் மின்சாரத்தை,
மத்திய அரசு தமிழகத்துக்கே வழங்க வேண்டும். இது குறித்து முதல்வர்
ஜெயலலிதாவின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இதர அரசியல் கட்சிகளும்
பொதுமக்களும் ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு, பாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.