சரவணம்பட்டி : சரவணம்பட்டி அருகே நகை கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை,
சரவணம்பட்டி அருகே உள்ள விஸ்வாசபுரத்தில் ஒரு ஹார்டுவேர் கடையின் மேல்
மாடியில் மாருதி ஜூவல்லர்ஸ் என்ற நகை கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று
முன் தினம் இரவு கடை உரிமையாளர் முருகன் கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு
சென்றார். சங்கராபுரத்தைச் சேர்ந்த சரணவணன் மற்றும் ஹார்டுவேர் கடைக்கு
சா#பாபா காலனியை சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோர் காவல் பணியில் இருந்தனர்.
இரவு
மகேஸ்வரன் சாப்பிடச் சென்றபோது, 28 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள்
பைக்கில் வந்துள்ளனர். வாட்ச் மேன் சரவணனை கட்டிப்போட்டு விட்டு, நகை கடை
இருக்கும் மேல் மாடிக்கு சென்றனர். கொண்டு வந்திருந்த ஆயுதங்களால் கடையின்
பூட்டை உடைக்க முயன்றனர். அப்போது, சாப்பிடச் சென்ற மகேஸ்வரன் கடைக்கு
திரும்பினார்.
அங்கு, சரவணன் கட்டப்பட்டிருந்ததை கண்ட மகேஸ்வரன்,
அதிர்ச்சியுற்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டதும்,அருகில் இருந்த
பொதுமக்கள் ஓடி வந்தனர். கொள்ளையடிக்க வந்த இளைஞர்கள் ஆக்ஸா பிளேடு,
சுத்தியல் போன்றவைகளை போட்டு விட்டு பைக்கில் தப்பிச்சென்றனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற சரவணம்பட்டி போலீசார், ஆயுதங்களை
கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.