கோவை : கோவையில்
போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த, ஆயுதப்படை போலீசை
தாக்கிய, போதையில் இருந்த, வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை
ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஏட்டு முருகேசன் தலைமையில், நேற்று முன்தினம் இரவு 7:00
மணிக்கு, ரயில்வே ஸ்டேஷன் அருகில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில்
போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தாறுமாறாக வந்த மகேந்திரா சரக்கு
வேனை சோதனைக்கு உட்படுத்தினர். போக்குவரத்து நிறைந்த நேரத்தில்,
குடிபோதையில் ஜீப்பை ஓட்டி வந்ததால், போலீசார் எச்சரித்தனர். வழக்குப்பதிவு
செய்ய வாகனத்தை ஓரமாக நிறுத்த கூறியுள்ளனர்.
ஆவேசமடைந்த வேன் டிரைவர்,
ஆயுதப்படை போலீஸ் ரமேஷ், 41, என்பவரை தாக்கினார். போதை வாலிபரை "கவனித்த'
போலீசார், ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில்,
வெங்கிட்டாபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த வெற்றிவேல், 37, என்பது
தெரிந்தது. அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், குடிபோதையில் வாகனம்
ஓட்டுதல்,கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு
செய்து, வெற்றிவேலை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.