கோவை : டில்லியில்,
பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வரும் மாணவி குணமடைய, ஸ்ரீஜி கல்லூரியில் நேற்று கூட்டு வழிபாடு
நடந்தது.
குனியமுத்தூர்-கோவைப்புதூர் பிரிவிலுள்ள ஸ்ரீஜி கலை அறிவியல் கல்லூரி ஆண்டாள் மகளிர் பேரவை சார்பில், சிறப்புக்கூட்டம் நடந்தது.
கல்லூரி முதல்வர் சேகர் தலைமை வகித்தார். கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில்,
டில்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பஸ்சில் கயவர்களால், பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம். குற்றவாளிகளுக்கு கடுமையான
தண்டனை வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண் விரைவில் குணமடைய கூட்டுப்பிரார்த்தனை செய்தல் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து,
நேற்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, பாதிக்கப்பட்ட பெண்
விரைவில் குணமடைய உண்ணாவிரதம், கூட்டுப்பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.