கோவை : கோவை,
மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில், நோயாளிகள் அறையில்
இருந்த நகை, பணத்தை திருடிய வாலிபரை போலீசார் தேடுகின்றனர்.
கேரளா
மாநிலம் அலப்பி, குமாரபுரத்தை சேர்ந்தவர் அனில்குமார், 38. அவரது மகனுக்கு
காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதால், கோவை சா#பாபாகாலனியிலுள்ள தனியார்
மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.
அறுவை சிகிச்சை முடிந்த
நிலையில், மனைவி, குழந்தையுடன் அறையில் இருந்தார். அப்போது, மருத்துவமனை
வரவேற்பாளர், இன்டர்காமில், அனில்குமாரை தொடர்பு கொண்டார். "உங்கள் உறவினர்
போன் செய்துள்ளார்' என்று கூறி இணைப்பு கொடுத்துள்ளார். மலையாளத்தில்
பேசியவர், மருத்துவமனைக்கு வெளியே நிற்பதாகவும், வந்து அழைத்து
செல்லுமாறும் கூறியுள்ளார். அதனால், அறையில் இருந்து மருத்துவமனைக்கு
வெளியே அனில்குமாரும், அவரது மனைவியும் சென்றனர்.
அங்கு யாரும்
இல்லாததால், அறைக்கு திரும்பி சென்றனர். அப்போது, அறையில் இருந்து 2.5
பவுன் நகை, பணம் ஐந்தாயிரம் ரூபாய், மொபைல்போன், இரண்டு ஏ.டி. எம்.,
கார்டுகள் இருந்த பேக் திருட்டு போயிருந்தது.
அதிர்ச்சி அடைந்து,
மருத்துவமனை வரவேற்பாளரை தொடர்ப்பு கொண்டு கூறியுள்ளார். அதன்பின், உறவினர்
என்று கூறி போன் செய்தவரின் எண்ணை பெற்றார். அந்த எண்ணுக்கு தொடர்பு
கொண்டபோது, பணத்தையும், நகையையும் திருடி விட்டேன். அதற்காகத்தான் போன்
செய்து வெளியே வரவழைத்தேன் என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த
அனில்குமார், சா#பாபாகாலனி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார்
வழக்குப்பதிவு செய்து, திருட்டு ஆசாமியின் மொபைல்போன் எண்ணை கொண்டு
விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.