காரமடை : பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர்கள் ஆண்ட்ரூஸ், 43 மற்றும் டேவிட் வில்சன், 40. இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பகுதியில் நடக்கும் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு, நேற்று முன்தினம் சென்றனர்.
பார்வையாளர்கள் நேரம் முடிந்த பின்னும், இவர்கள் முகாம் வளாகத்தில் நின்றிருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் உமா, இவர்களிடம் பார்வையாளர்கள் நேரம் முடிந்து விட்டதை தெரிவித்து, வளாகத்தில் இருந்து வெளியேறும்படி தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த ஆண்ட்ரூஸ், டேவிட் வில்சன் ஆகியோர், பெண் போலீஸ் உமாவிடம் தகராறில் ஈடுபட்டனர். காரமடை போலீசார் விசாரித்து, பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.