தனிநபர் நிலத்தில் மேம்பாட்டு பணிகளுக்கு ஊராட்சிகள் தேர்வு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பொள்ளாச்சி : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், இணைக்கப்பட்டுள்ள தனிநபர் நிலத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒன்றியம் தோறும் "பைலட்' ஊராட்சிகள் தேர்வு செய்து, பயனாளிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
கிராமங்களில், வேலை இல்லாத மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கும் வகையில், மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் மேற்கொள்ளும் பணிகளுக்கேற்ப தினக்கூலியாக 132 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தால், விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், விவசாய பணிகளும் இத்திட்டத்துடன் இணைக்க மாநில அரசு முயற்சி எடுத்து வருகிறது. முதல்கட்டமாக, அரசு துறைக்கு சொந்தமான நிலங்களிலும், சிறு, குறு விவசாயிகள், தொகுப்பு வீடுகள் திட்ட பயனாளிகள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், நில சீர்திருத்த பயனாளிகள் உள்ளிட்டோரின் நிலங்களில் மேம்பாட்டு பணிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், மேற்கொள்ள வேண்டிய பணிகள், அளவீடுகள் ஆகியவை குறித்து சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதில், அரசு துறைகளான தோட்டக்கலை, வேளாண், கால்நடை துறை ஆகியவற்றுக்கு சொந்தமான நிலத்தை மேம்படுத்தும் பணியும், வனத்துறையுடன் இணைந்து மரம் நடுதல், நாற்று பண்ணை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தற்போது தேவைப்படும் பணிகள் குறித்த விபரங்கள், துறை ரீதியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
தனிநபர் நிலமேம்பாட்டு பணிகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்ளும் வகையில், "பைலட்' ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒரு ஊராட்சி வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளிடம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த பணிகள் பட்டியலை பொறுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் இறுதி செய்யப்படவுள்ளது.
இந்த விபரங்களை, தொகுத்து மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்ப ஒன்றிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து ஒன்றியங்களிலும் தீவிரமாக நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் இப்பட்டியல் தயாரிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "வேலை உறுதி திட்டத்தில், தனிநபர் நிலத்துக்கு தேவையான மேம்பாட்டு பணிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. பரிச்சார்த்த முறையிலான, இத்திட்டத்துக்கு மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து, விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே செய்யப்பட்ட பயனாளிகளின் நிலங்கள், அதில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பட்டியல்
தயாரிக்கப்படுகிறது. வேளாண் துறையுடன் இணைந்து பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிறது,' என்றனர்.
"செயல்வடிவம் அடுத்தமாதம்'
தனிநபர் மற்றும் அரசு துறை நிலங்களில் மேம்பாட்டு பணிகள் குறித்து விபரங்களை சேகரித்து, அடுத்த மாதம் முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தில், செயல்படுத்திய பின் விவசாயிகளிடம் கருத்து கேட்டு, அதற்கேற்ப மாற்றம் செய்யவும், புதிய பணிகளை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நில மேம்பாட்டு பணிகளுக்கு விவசாயிகளிடமும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்